×

அரசு கலைக் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

 

சிவகங்கை, ஜூலை 1: சிவகங்கை அரசு மன்னர் துரைசிங்கம் கலைக் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. முன்னதாக கல்லூரிக்கு வந்த இளநிலை முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பூ கொடுத்து வரவேற்பு அளித்தனர். வரலாற்றுத்துறை தலைவர் கலைச்செல்வி வரவேற்புரை ஆற்றினார். முதல்வர் அந்தோணி டேவிட் நாதன் தலைமையுரை ஆற்றினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுபாஷினி கருத்துரை வழங்கினார். பேராசிரியர் அப்துல் ரகீம் சிறப்புரையாற்றினார். விலங்கியல் துறை தலைவர் ராமலிங்கம் நன்றி கூறினார். பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post அரசு கலைக் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Sivaganga Government Mannar Duraisingham Arts College ,arts ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...