×

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக விலங்கு வழி நோய்கள் விழிப்புணர்வு தின உறுதிமொழி

பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா அடைக்கம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக விலங்கு வழி நோய்கள் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 6ம்தேதி ‘ஜூனோசிஸ் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. ஜூனோசிஸ் என்பது ‘விலங்கு வழி நோய்கள்’ என்பதாகும். இந்த நோய் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும் பரவுகிறது. காட்டு விலங்குகள், வீட்டில் வளர்க்கும் பூனை, நாய், பறவைகள் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது. சில ஆட்கொல்லி நோய்களும் விலங்குகள் மூலம் பரவுகின்றன. விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூலை 6 அன்று ஜூனோசிஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா அடைக்கம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக விலங்கு வழி நோய்கள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மருத்துவர் அரவிந்த் விலங்கு வழி பரவும் நோய்கள் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகள் குறித்து விளக்கி பேசினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு நோய் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் மருந்தாளுநர் ரெங்கராஜ், மருத்துவ செவிலியர்கள் திலகா, தேவி, எப்சிபா ரூத் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக விலங்கு வழி நோய்கள் விழிப்புணர்வு தின உறுதிமொழி appeared first on Dinakaran.

Tags : World Animal Borne Disease Awareness Day ,Government Primary Health Centre ,Padalur ,World Animal-Borne Disease Awareness ,Government Primary Health Center ,Aladhur Taluk Adikampatti Village ,World Animal-Borne Disease Awareness Day ,Dinakaran ,
× RELATED சூளேஸ்வரன்பட்டியில் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்