×

அனுமதியின்றி மது விற்றவர் கைது

 

சிவகாசி, ஜூன் 10: சிவகாசியில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிவகாசி நாரணாபுரம் ரோட்டில் சிவகாசி கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடையின் அருகில் அனுமதியின்றி மது விற்பனை செய்த எம்.புதுப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் அருண்குமார்(20) என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post அனுமதியின்றி மது விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,East ,Sub-Inspector ,Rajakumar ,Sivakasi Naranapuram Road ,Tasmak ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...