×

அடகு நகைகளை திருப்பி தர மறுத்த கடை உரிமையாளர் கைது

 

சிவகங்கை, மே 25: அடகு நகைகளை திருப்பி தர மறுத்த கடை உரிமையாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(42). இவர் கடந்த 2019ம் ஆண்டு, சிவகங்கையை சேர்ந்த யோகநாத்முரளி (43) சிவகங்கை-மதுரை முக்கு பகுதியில் நடத்தி வந்த நகை அடகு கடையில் நகைகளை அடகு வைத்து ரூ.14 லட்சம் கடனாக பெற்றார். இதுபோல் மேலும் சிலரும் இந்த அடகு கடையில் நகைகளை அடகு வைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2023ல் யோகநாத்முரளி நகை அடகு கடையை மூடியுள்ளார். இதையடுத்து அங்கு நகை அடகு வைத்த மணிகண்டன் மற்றும் திலகவதி ஆகியோர் அடகு வைத்த நகையை திரும்ப கேட்டுள்ளனர். ஆனால் நகையை தர மறுத்த யோகநாத்முரளி மற்றும் அவரது மனைவி கீதா ராணி ஆகியோர் நகையை திரும்ப கேட்டவர்களை மிரட்டியுள்ளனர். இது குறித்து மணிகண்டன் மாவட்ட எஸ்பி ஆசிஸ் ராவத்திடம் புகார் அளித்தார். எஸ்பி உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி யோகநாத்முரளி, கீதாராணி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து யோகநாத்முரளியை கைது செய்தனர்.

The post அடகு நகைகளை திருப்பி தர மறுத்த கடை உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,District Crime Branch ,Manikandan ,Kamaraj Colony, Sivaganga ,Yoganath Murali ,Sivaganga- ,Madurai Mukku… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...