×

அச்சுறுத்தும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 21 கோடியை தாண்டியது: 44.04 லட்சம் பேர் உயிரிழப்பு!

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44.04 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,404,266 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 210,059,768 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 188,189,688 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 108,043 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு தற்போது 17,465,814 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா தொற்று அதிகம் பரவிய நாடுகளில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 158,127 பேரும், பிரேசிலில் 40,693 பேரும், ஈரானில் 39,174 பேரும், இந்தியாவில் 35,797 பேரும், இங்கிலாந்தில் 33,904 பேரும், பிரான்சில் 28,405 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அமெரிக்காவில் மொத்தம் 641,346 பேரும், பிரேசிலில் 571,662 பேரும், இந்தியாவில் 433,063 பேரும், மெக்சிகோவில் 249,529 பேரும், பெரூவில் 197,539 பேரும், ரஷ்யாவில் 172,909 பேரும், இங்கிலாந்தில் 131,260 பேரும் உயிரிழந்துள்ளனர்….

The post அச்சுறுத்தும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 21 கோடியை தாண்டியது: 44.04 லட்சம் பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Corona ,Geneva ,
× RELATED பள்ளி கழிவறைகளில் தண்ணீர் இல்லாததால்...