×

அக்னீஸ்வரசுவாமி கோயில் கும்பாபிஷேகம்; திருமருகல் வட்டாரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

நாகப்பட்டினம், ஜூன் 5: திருமருகல் அருகே திருப்புகலூர் அக்னீஸ்வரசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருமருகல் வட்டாரத்தில் பள்ளிகளுக்கு இன்று (5ம் தேதி) உள்ளூர் விடுமுறை என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே திருப்புகலூர் கிராமத்தில் அக்னீஸ்வரசுவாமி கோயிலில் இன்று (5ம் தேதி) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்துவகை பள்ளிகளுக்கு அன்றைய தினம் மட்டும் உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனை ஈடு செய்யும் வகையில் வரும் 14ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

The post அக்னீஸ்வரசுவாமி கோயில் கும்பாபிஷேகம்; திருமருகல் வட்டாரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Agneeswaraswamy Temple Kumbabhishekam ,Thirumarugal ,Nagapattinam ,Collector ,Akash ,Thiruppukalur ,Agneeswaraswamy Temple ,Thirumarugal… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...