×

இயக்குனர்களுடன் உல்லாசமாக இருக்க கணவர் சித்ரவதை: தமிழ் நடிகை பகீர் குற்றச்சாட்டு

மும்பை: இந்தி நடிகை ஈவா குரோவர், அவரது முன்னாள் கணவரும் பாலிவுட் முன்னணி நடிகர் ஆமிர்கானின் சகோதரருமான ஹைதர் அலி கான் மீது அதிரவைக்கும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்தியில் ‘யாரா சில்லி சில்லி’, ‘ரெடி’ உள்பட பல படங்களில் நடித்து பிரபலமானவர் ஈவா குரோவர். தமிழில் ‘கட்டுமரக்காரன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். கடந்த 2000ம் ஆண்டு ஆமிர்கானின் சகோதரர் முறை உறவினரான ஹைதர் அலி கான் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இருவருக்கும் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக 5 ஆண்டுகளில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு ஈவா குரோவர் அவரது திருமண வாழ்க்கையில் நடந்த மோசமான நிகழ்வுகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். பணத்துக்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும் ஹைதர் அலி கான் தன்னை பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் உடல் ரீதியாக தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என வற்புறுத்தியதாக ஈவா தெரிவித்துள்ளார்.

அதற்கு மறுத்ததால் தன்னை ஹைதர் அலி கான் கடுமையாக துன்புறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். இது பாலிவுட் வட்டாரத்தில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஹைதர் அலி கானைனை பற்றி அவர் பேசுகையில், ‘இன்று ஹைதர் நல்ல நிலையில் இல்லை. அவருக்கு வீடு இல்லை, உணவுக்கு கூட அவர் சிரமப்படுகிறார். சில நேரங்களில் யாராவது அவரை ஒரு வாடகை அறையில் தங்க வைக்கிறார்கள்.

சில நேரங்களில் அவரது நண்பர் ஒருவர் அவருக்கு உதவுகிறார். எனக்கு வருத்தமாக இருக்கிறது. எது நடந்ததோ அது நடந்துவிட்டது. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் பார்த்தால், அவர் ஒரு காலத்தில் என் கணவராக இருந்தவர். தொடர்ந்து மதுவை அளிக்கும் மனிதர்களாலேயே அவர் சூழப்பட்டிருக்கிறார். அவரை கவனித்துக்கொள்ள யாரும் இல்லை. அவரது இறுதி நேரம் வரும்போது அவர் அமைதியை அடைய வேண்டும் என்று மட்டுமே நான் பிரார்த்திக்கிறேன். அவர் நிறைய துன்பங்களை அனுபவித்துவிட்டார்’ என்றார்.

Tags : Chitravathai ,Bakeer ,Mumbai ,Eva Grover ,Haider Ali Khan ,Bollywood ,Aamir Khan ,Amir Khan ,
× RELATED ஜனநாயகன் விமர்சனம்…