சென்னை சசிகுமார், சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அபிஷன் ஜீவிந்த், அடுத்து ‘வித் லவ்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இவ்விரு படங்களும் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்திருந்த நிலையில், மீண்டும் அவர் எப்போது படம் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இம்முறை அவர் படம் இயக்காமல், மீண்டும் நடிகராகவே தொடர முடிவு செய்துள்ளார்.
இப்படத்தில் அவரது தந்தையாக, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்கிறார். தந்தைக்கும், மகனுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம் மற்றும் பிரச்னைகளை மையப்படுத்திய கதையுடன் இப்படம் உருவாகிறது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இணை இயக்குனர் கவுதம் சிவராமன் எழுதி இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

