×

நாளுக்கு நாள் முற்றிக்கிட்டே போகும் தவெக அரசின் “ரீல்ஸ் வெறி”; டம்மி முதல்வருக்கு விவசாயிகளின் நலன் பற்றியெல்லாம் கவலையே இல்லை..!

தஞ்சை: இன்று ஆடி 18, ஆடிப்பெருக்கில் ஆறு முழுவதும் தண்ணீர் வழிந்து ஓடும். ஆனால், இப்போது டெல்டா நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. “திமுக ஆட்சி இருந்திருந்தல் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா?” நிர்வாகத் திறனற்ற ஒரு டம்மி முதல்வரால் இந்த நிலைமை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசிற்கு எதிராக தஞ்சையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ர்வாக திறனற்ற முதல்வர் விஜய் காரணமாக காவிரி வறண்டு கிடப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். திமுக ஆட்சியில் குறித்த நேரத்தில் ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது என்று கூறினார்.

எந்த மக்கள் பிரச்சனைகள் மீதும் கவனம் செலுத்தாமல் திமுக மீது இன்றைக்கு என்ன புதிய வழக்கு போடலாம் என்பதிலேயே தான் முதல்வரின் கவனம் உள்ளது. ஆட்சி அமைத்து 3 மாதங்கள் ஆகியும் பாஜக என்ற சொல்லைக் கூட உச்சரிக்காத தைரியசாலி தான் நமது முதல்வர். ஆட்சியை நடத்த காங்கிரஸ் தயவு தேவை என்பதால், தண்ணீர் திறக்காத கர்நாடகாவை தட்டி கேட்க விஜய் அச்சப்படுவதாக உதயநிதி ஸ்டாலின் சாடினார். விவசாயிகளின் நலனை விட சுயநலம் தான் விஜய்க்கு முக்கியமாக உள்ளது.

காவிரியில் தண்ணீர் திறப்பது பற்றியெல்லாம் தவெக அரசுக்கு கவலையே இல்லை, விவசாயிகளின் நலனும் முக்கியம் இல்லை. விவசாயிகள் கண்ணீர் வடித்து கொண்டிருக்கும் போது, தமிழக அமைச்சர்கள் சினிமா பார்த்து கண்ணீர் விடுகின்றனர். இதையெல்லாம் ரீல்ஸாக போடும் ஒரு அரசை இந்தியாவே இதுவரை கண்டதில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாயிலேயே வடை சுடும் அரசாக தான் தற்போதைய தமிழக அரசு இருக்கிறது.

Tags : Tanjay ,Audi ,Adipperuk ,Delta ,Dima ,
× RELATED தமிழக அரசு கோரிக்கை நிராகரிப்பு;...