×

தஞ்சாவூரில் தவெக அரசை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

 

தஞ்சை: தஞ்சாவூரில் தவெக அரசை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியம், மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய தவெக அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டியும் திமுக சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு எதிர்க்கட்சித் தலைவரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்வேறு தோழமைக் கட்சியினர், திமுக தொண்டர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்னர். “வாயத் திறங்க.. வாயத் திறங்க.. மேகதாது பிரச்சனையில் தூங்கி வழியும் முதல்வரே வாயத் திறங்க.. புரியலையா.. புரியலையா.. விவசாயிகளின் வேதனைகள்.. புரியலையா.. புரியலையா..” என தவெக அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Udayanidi Stalin ,Daveka ,Thanjavur ,THANJAI ,Tanjavur ,Udayaniti Stalin ,Dweka government ,Megadhat dam ,
× RELATED முதலமைச்சர் விஜயை விமர்சித்த...