- கர்நாடக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- காவிரி
- காவிரி ஆணையம்
- தில்லி
- காவிரி ஆணையம்
- கர்நாடகா அரசு
- கேவியர் நீர் கட்டுப்பாடு
டெல்லி: தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு காவிரி ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. வினாடிக்கு 3,500 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு, காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று, காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. முன்னதாக நேற்று டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இதில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை பொய்த்ததால் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட முக்கிய அணைகளில் 50% அளவுக்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளது. பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவைக்கு மட்டுமே நீர் இருப்பு உள்ள காரணத்தால், தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது என கர்நாடகம் தெரிவித்தது.
ஆனால் கர்நாடகாவின் வாதத்தை ஏற்க மறுத்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும். மழை பற்றாக்குறை இருக்கிறது, எனினும் அணைகளில் உள்ள நீர் இருப்பின் அளவுக்கு ஏற்றவாறு இரு மாநிலங்களும் நீரை பங்கிட்டுக் கொள்ள வேண்டும். கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளிலிருந்தும் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 3500 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் இந்த பரிந்துரையை ஏற்று, தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
