- ஆதி தரோதம்
- இஹகார்கொவ்
- மதுரை
- கலநகர் கோயில்
- அஹர்கோவில்லே
- சுந்தரராஜப் பெருமால்
- Annam
- சிம்மம்
- அவுமர்
- கருடன்
- சேஷ
- தங்கபால்
மதுரை: மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அன்று முதல் தினமும் காலையில் தங்கப்பல்லக்கிலும், மாலையில் அன்னம், சிம்மம், அனுமார், கருட, சேஷ உள்ளிட்ட வாகனங்களில் சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நாளை (ஜூலை 29) காலை நடைபெற உள்ளது. இதற்காக கோயில் கோட்டை வாசல் மற்றும் கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.
தேரோட்டத்திற்காக தேரின் சக்கரங்கள் வண்ணம் தீட்டப்பட்டு, தேரின் துணி சாரங்களும், வண்ண திரைச் சேலைகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வண்ண திரை சேலையில் பெருமாளின் பத்து அவதாரங்களும் கை வேலைப்பாடுகளுடன் இடம் பெற்று அழகுற காட்சியளிக்கிறது. தேர் வரக்கூடிய நான்கு மாட வீதிகளில் ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை நடைபெறும் தேரோட்டத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பகுதியில் இருந்து நாட்டார்கள் பாரம்பரிய வழக்கப்படி மாட்டுவாண்டி உள்ளிட்ட வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர். இதையொட்டி மாவட்ட எஸ்பி தலைமையில் 3க்கும் மேற்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் இணை ஆணையர் ஹரிஹரன் தலைமையில் உள்துறை கண்காணிப்பாளர் ரம்யா சுபாஷினி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
