×

பட்ஜெட் கூட்டத் தொடர் கூட உள்ள நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது

 

சென்னை: பட்ஜெட் கூட்டதொடர் தொடங்க உள்ள நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ள தவெக அரசின் முதல் பொது பட்ஜெட் ஆகஸ்ட் 5ம் தேதியும், வேளாண் பட்ஜெட் மே 6ம் தேதியும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பான திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். மேலும், எதிர்க்கட்சி துணை தலைவர் கே.என். நேரு, கொறடா எவ.வேலு உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவையில் ஆளும்கட்சி வியூகங்களை திறம்பட எதிர்கொள்வது உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதுதவிர மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை, எம்எல்ஏ.க்கள் குதிரை பேரம், காவல் மரணங்கள், மேகதாது அணை, கோயில் நிலங்கள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேரவையில் கேள்வியெழுப்பவும் திமுக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘சட்டப்பேரவைக்கு நீங்கள் அனைவரும் முன்தயாரிப்புடன் செல்ல வேண்டும். முழுமையான விவரங்கள் இல்லாமல் பேரவையில் கேள்விகளை எழுப்பக்கூடாது. பேரவையில் பேச வேண்டியதை தற்போதே தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் தொகுதிகள் மட்டுமின்றி அருகே உள்ள தொகுதிகளில் நிலவும் முக்கிய பிரச்னைகளையும் குறிப்பெடுத்து சட்டப்பேரவையில் முன்வைக்க வேண்டும். சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்படுவதால் சட்டப்பேரவையில் கவனமாக செயல்பட வேண்டும் என்பன உட்பட பல்வேறு அறிவுறுத்தல்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கியதாக கூறப்படுகிறது.

 

Tags : DMK ,Udhayanidhi Stalin ,Chennai ,Thaweka government ,Tamil ,Nadu assembly ,
× RELATED கனிமங்களை கொண்டு செல்ல நிரந்தர தடை...