×

கஞ்சா விற்ற 3 பேர் கைது

திருச்சி, ஜூலை 14: திருச்சி கருமண்டபம், தென்னூர் பகுதிகளில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் ஜூலை 12ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கருமண்டபம் ஓ, பாலம் அருகே கஞ்சா விற்ற கருமண்டபம் சமத்துவபுரம் 2வது தெருவைச் சேர்ந்த ரவுடி ேஹமேஷ்வரன்(24), கருமண்டபம் ஆர்எம்எஸ் காலனியைச் ேசர்ந்த ஆரோக்கியராஜ் (24) ஆகிய 2 பேரை கண்டோன்மென்ட் போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று தென்னூர் ரயில்வே கேட் அருகே கஞ்சா விற்ற தென்னூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த குருமூர்த்தி(25) என்பவரை தில்லைநகர் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். மேலும் இவர்களிடமிருந்து 270 கிராம் கஞ்சா, மற்றும் ரூ.200 பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags : Trichy ,Karumandapam ,Thennur ,Karumandapam O bridge ,2nd street ,Karumandapam Samathuvapuram… ,
× RELATED லாட்டரி விற்றவர் கைது