திருச்சி, ஜூலை 14: திருச்சி உறையூர் பகுதியில் லாட்டரி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் ஜூலை 12ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது புத்தூர் சாலை அருகே லாட்டரி விற்ற உறையூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த முத்துகுமார்(43) என்பவரை உறையூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து லாட்டரி, 1 செல்போன், ரூ.300 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
