×

ஓசூரில் ராஜகால்வாயை ஆக்கிரமித்த குப்பைகளால் சுகாதார சீர்கேடு அகற்ற கோரிக்கை

ஓசூர், ஜூலை 14: ஓசூரில் ராஜகால்வாயை ஆக்கிரமித்துள்ள குப்பை கழிவுகளால், நோய் பரவும் அபாயம் உள்ளதால், குப்பைகளை விரைந்து அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில், பல்வேறு இடங்களில் மழை நீர் கால்வாய் உள்ளது. இப்பகுதியில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் அதிகரிப்பால், மழை நீர் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. சில பகுதிகளில் உள்ள மழை நீர் கால்வாய்கள், கழிவு நீர் செல்லும் கால்வாயாக மாறி உள்ளது. மேலும் மழை நீர் செல்லும் ராஜகால்வாய் ஆக்கிரமிப்பால் குறுகி, சிறிய ஓடையாக மாறி உள்ளது. கால்வாய்களில் உள்ள குப்பைகளை, மாநகராட்சி ஊழியர்கள் அகற்றாததால், பிளாஸ்டிக் கழிவுகள் மழை நீர் கால்வாய்களில் தேங்கி நின்று அடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் மழைக்காலங்களில் மழை நீர், நீர்நிலைகளுக்கு செல்லாமல், சாலையோரங்களில் தேங்குகிறது. அதே போல், கழிவு நீரும் செல்லாமல் சாலையோரங்களில் தேங்கி நோய் பரவுகிறது. மழைநீர் கால்வாய்களில், மழை நீர் செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து விடும் அபாயம் உள்ளது. இதுபோன்று, மழைநீர் மற்றும் கழிவு நீர் கால்வாய்களில் அடைத்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Rajagalvai ,Hosur ,Hosur Corporation ,Krishnagiri district ,
× RELATED கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தல தேர்பவனி விழா