- கிருஷ்ணகிரி புனித பாத்திமா ஆலயம் தெர்பவானி திருவிழா
- கிருஷ்ணகிரி
- கிருஷ்ணகிரி புனித பாத்திமா ஆலயத்தின் தெர்பவானி திருவிழா
கிருஷ்ணகிரி, ஜூலை 14: கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின், 53ம் வருட தேர்பவனி விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் பங்கு தந்தையர்கள் தலைமையில் திருப்பலி பூஜைகளும், மறையுரைகளும் நிகழ்த்தப்பட்டது. மாலை நேரங்களில் தேவாலயத்தை சுற்றி சிறிய அன்னையின் தேர்பவனி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் தேர்பவனி, நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் திருத்தேரினை, தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் மந்திரித்து, தேர் பவனியை துவக்கி வைத்தார்.
இந்த தேர்பவனி பெங்களூரு சாலை, ராயப்பன் சாலை, கூட்டுறவு காலனி, கார்னேசன் திடல், ரவுண்டானா, குப்பம் சாலை, காந்தி சாலை, பழையப்பேட்டை, தர்மராஜா கோயில் சாலை வழியாக சென்று, மீண்டும் திருத்தலத்தை வந்தடைந்தது. விழாவில், கிருஷ்ணகிரி மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக தேரின் மீது உப்பு, மிளகு மற்றும் மலர்களை தூவி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவினையொட்டி, தேவாலயம் முழுவதும் வண்ண,வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
