- தவேகா
- நயினார் நாகேந்திரன் சாடல்
- பாஜா
- ஜனாதிபதி
- நைனர் நாகந்திரன்
- இந்து மத அறக்கட்டளை
- கரூர்
- முதல் அமைச்சர்
- விஜய்
- டெக்கா
மீனம்பாக்கம்: பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: கரூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 3,085 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு தாரைவார்த்து கொடுத்துள்ளனர். ‘எங்கள் ஆட்சியில் லஞ்சம் இல்லை’ என முதல்வர் விஜய் கூறியுள்ளார். எனினும், தவெக ஆட்சியில் அனைத்து அரசு துறைகளிலும் லஞ்சம் கொடுப்பதை ஆரம்பித்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்ப வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்குவதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. அதே நேரத்தில் பல துறைகளில், வாரிசு அடிப்படையில் பலருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட
வேண்டியுள்ளது. அவர்களுக்கு கொடுத்துவிட்டு, பிறகு கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு கொடுத்தால்தான் சரியாக இருக்கும். கரூரில் முதல்வர் விஜய்யின் பேச்சு, இந்துக்களின் மனம் புண்படும்படியாக அமைந்திருப்பது மிகுந்த வேதனையாக உள்ளது.
தேர்தல் பிரசாரத்தின்போது கரூர் கூட்டத்துக்கு மதியம் 12 மணிக்கு வருகிறேன் என கூறிவிட்டு, அன்றிரவு 7 மணியளவில் ஏன் விஜய் வருகை தந்தார்? அதன் காரணமாகத்தான் கரூரில் இத்தகைய மனித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
