×

ஈரான் நாட்டால் எனக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால்… டிரம்ப் பிறப்பித்த ரகசிய உத்தரவு

வாஷிங்டன்: தன்னை ஈரான் நாடு படுகொலை செய்ய திட்டமிட்டால், அந்த நாட்டின் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கொடூர வான்வழித் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் நாடு தன்னை படுகொலை செய்ய திட்டமிட்டால், அந்த நாட்டின் மீது இதுவரை கண்டிராத வகையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகக் கொடூரமான ராணுவத் தாக்குதலை நடத்துமாறு தற்காப்பு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து நியூயார்க் போஸ்ட் செய்தி நிறுவனத்திடம் பேசிய அதிபர் டிரம்ப், ‘ஈரான் நாட்டின் மிக முக்கிய இலக்காக நான் இருந்து வருகிறேன்; ஒருவேளை எனக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அவர்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு வான்வழித் தாக்குதல் நடத்தி அந்நாட்டை அழிக்க வேண்டும் என்று எனது ராணுவத்திற்கு அறிவுறுத்தி இருக்கிறேன்’ என்று கூறினார்.

இஸ்ரேல் உளவுத்துறை புதிய அச்சுறுத்தல்களை எச்சரித்துள்ளதை டிரம்ப் மறுத்தபோதிலும், கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரானின் முக்கிய ராணுவ தளபதி காசிம் சுலைமானி அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதில் இருந்து, டிரம்பை பழிவாங்க ஈரான் தொடர்ந்து முயன்று வருகிறது; கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கி குண்டு டிரம்பின் காதை உரசிச் சென்று உயிர் தப்பிய சம்பவத்திலும் ஈரானுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது; மேலும், இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையை தொடர ஈரான் கோரியதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டாலும், தற்காலிக போர்நிறுத்தம் இனி கிடையாது என்று டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

Tags : Iran ,Trump ,WASHINGTON ,US ,PRESIDENT ,President Trump ,
× RELATED தவெக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் லஞ்சம்: நயினார் நாகேந்திரன் சாடல்