×

மகாராஷ்டிராவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3,000 கேஸ் சிலிண்டர்கள்

மும்பை: மகாராஷ்டிராவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், ராய்காட் மாவட்டம் சாவ்ணே பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எரிவாயு சிலிண்டர் நிரப்பு மையத்தின் பாதுகாப்புச் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அங்கிருந்த சுமார் 3,000 கேஸ் சிலிண்டர்கள் (நிரப்பப்பட்டவை மற்றும் காலியானவை) வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன அவற்றை அப்பகுதி மக்கள் பலர் உயிரையும் பொருட்படுத்தாமல் போட்டி போட்டுக் கொண்டு எடுத்துச் சென்றனர். எடுத்துச் சென்ற சிலிண்டர்களை உடனடியாக அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Tags : Maharashtra ,Mumbai ,Hindustan ,Sawhney ,Raigad district ,
× RELATED ரூ.2,000 நோட்டு வைத்திருந்தால் தற்போதும்...