சென்னை: குப்பை கிடங்குகளை வேறு இடத்துக்கு மாற்றும் வகையில் செயல்திட்டம் ஒன்றை அரசு வகுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். தஞ்சை மாநகரில் உள்ள குப்பை கிடங்கில் அடிக்கடி பற்றி எரியும் தீயால் மக்கள் சிரமம் அடைவதாக தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சை மாநகரின் மையப்பகுதியில் காற்று மாசு ஏற்படுத்தும் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும். பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள குப்பை கிடங்குகளை அனைத்தையும் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
