×

கனகம்மாசத்திரம் அருகே எம்.சாண்ட் கடத்திய 3 டாரஸ் லாரி பறிமுதல்: 3 டிரைவர்கள் கைது

திருத்தணி: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் நித்யா மற்றும் அதிகாரிகள் நேற்று மாலை கனகம்மாசத்திரம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, திருத்தணியில் இருந்து வந்த லாரிகளை மடக்கி சோதனையிட்டனர்.

இதில், அனுமதியின்றி நடைசீட்டு இல்லாமல் 3 டாரஸ் லாரிகளில் எம்.சாண்ட் மற்றும் ஜல்லி கற்கள் ஏற்றிவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு கனகம்மாசத்திரம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவள்ளூரை சேர்ந்த முத்து (32), விழுப்புரத்தை சேர்ந்த ராஜ்குமார் (27), பெரம்பலூரை சேர்ந்த ரவி (43) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Tags : M. Sand ,Kanagammachatram ,Thiruvallur ,Nithya ,Geology ,Mining Department ,Thiruvallur Collector's Office ,
× RELATED 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்...