×

தமிழ்நாட்டில் மோசமான ஆட்சி நடக்கிறது: தவெக அரசு மீது எழிலரசன் குற்றச்சாட்டு

 

சென்னை: தமிழ்நாட்டில் மோசமான ஆட்சி நடக்கிறது என திமுக கொள்கை பரப்பு செயலாளர் எழிலரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; த.வெ.க. ஆட்சியில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. த.வெ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை திசைதிருப்பும் வகையில் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்து இழுத்துச் சென்றுள்ளது காவல்துறை.

முன்ஜாமின் மறுத்து ஒரு மணி நேரத்திற்குள் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது எந்த புகாரும் இல்லாத நிலையில் அவரை கைது செய்ய த.வெ.க. அரசு முயற்சிக்கிறது. ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்கு, அவதூறு பரப்பலாமா என்றுதான் தவெக அரசு யோசிக்கிறது. இடைத் தேர்தலில் ஜெயிப்பதற்காக இதுபோன்ற அத்துமீறலில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது.

இடைத்தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் பணிகளை முடக்க கைது என்ற பெயரில் த.வெ.க. அரசு சதி திட்டம் தீட்டுகிறது. பெரும்பான்மை வேண்டும் என்று ஆளுநர் கூறிய நாளில் குதிரை பேரத்தை தொடங்கிவிட்டார் விஜய். ஆட்சி அமைப்பதற்கு முன்பு தொடங்கிய த.வெ.க.வின் குதிரைபேரம் தற்போது வரை தொடர்கிறது. குதிரைப் பேரத்தை தொடங்கி வைத்தது முதலில் முதலமைச்சர் விஜய்தான். விஜய்யின் குதிரை பேரம் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியுள்ளார். முதலமைச்சர் விஜய்தான் – ஆனால் ஆக்டிங் முதலமைச்சர் ஆதவ்அர்ஜூனாதான் என்று கூறினார்.

Tags : Tamil Nadu ,Ezhilarasan ,T.V.K. government ,Chennai ,DMK ,Anna Arivalayam ,T.V.K. government… ,
× RELATED முன்னாள் அமைச்சர் அனிதா...