×

திருநிலை கிராம கொள்முதல் நிலையத்தில் மழையில் நனையும் நெல் மூட்டைகள்: விவசாயிகள் வேதனை

 

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் திருநிலை ஊராட்சியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிறப்பு, இறப்பு, திருமண நிதி உதவி போன்ற சான்றிதழ்கள் வாங்குவதற்காக இ-சேவை மையம் கட்டப்பட்டது. இந்த சேவை மைய கட்டிடம் பயன்படாத நிலையில் அதை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் நெல் கொள்முதல் நிலையமாக மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து பனையஞ்சேரி, திருநிலை, அக்கரப்பாக்கம் என 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் இந்த நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் வெட்ட வெளியிலேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்போது திடீர் திடீரென எதிர்பாராத விதமாக மழை வருகிறது. இதனால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கைக்கையை ஏற்று திருநிலை கிராமத்தில் புதிதாக நெல் கொள்முதல் நிலையம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், `விவசாயிகளான நாங்கள் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திருநிலையில் உள்ள இ-சேவை மையத்தில் இயங்கும் நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி வருகிறோம். அதில் தற்போது நெல் மூட்டைகளை கொண்டு சென்றால் வைப்பதற்கு இடம் இல்லாமல் வெட்ட வெளியில் அடுக்கி வைக்கிறார்கள். எனவே, இந்த கிராமத்தில் அரசே புதிதாக நெல் கொள்முதல் நிலையத்திற்கு கட்டிடம் கட்டி தர வேண்டும்’ என்கின்றனர்.

Tags : Thirunilal Grama Procurement Centre ,Uthukkottai ,Thirunilal Panchayat ,Yellapuram Union ,Periypalayam ,
× RELATED பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறையில்...