×

இந்தியாவின் புதிய ராணுவ தலைமை தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்பு…

டெல்லி: இந்தியாவின் 31-ஆவது ராணுவ தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்று கொண்டுள்ளார். முப்படைகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்பான பணிக்குப் பிறகு இன்றுடன் பணி நிறைவு பெறும் ஜெனரல் உபேந்திர திவேதிக்கு பதிலாக, தீரஜ் சேத் இந்த உயரிய பொறுப்பை ஏற்றுள்ளார்.

புதிய ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்றுள்ள இவர் மேற்கு எல்லைப் பகுதியில் ராணுவத்தின் இரண்டு செயல்பாட்டுப் பிரிவுகளுக்கு தலைமை தாங்கிய அரிதான சிறப்பைப் பெற்ற திறமையான ராணுவ அதிகாரி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய ராணுவ தலைமை தளபதியாக தற்போது பொறுப்பேற்று கொண்டுள்ள ஜெனரல் சேத், கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியின் (NDA) முன்னாள் மாணவர் ஆவார். இவர் 1986-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் Armoured Corps பிரிவில் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) மற்றும் டெஹ்ராதூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி (IMA) ஆகியவற்றின் முன்னாள் மாணவர் ஆவார். மேலும், பாரிஸில் உள்ள புகழ்பெற்ற ‘கமாண்ட் அண்ட் ஸ்டாப்’ படிப்பையும் முடித்துள்ளார்

31-ஆவது ராணுவத் தளபதியாக தற்போது பொறுப்பேற்பதற்கு முன்பு, அவர் ராணுவ துணைத் தளபதியாகப் பணியாற்றினார். இந்திய ராணுவத்தின் போர்த் திறன் மற்றும் நீண்டகால வளர்ச்சிகளுக்கு இவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்காலப் போர்க்களத் தேவைகளுக்கு ஏற்ப செயல்பாட்டுத் தேவைகளை ஒருங்கிணைப்பதில் ஜெனரல் சேத்தின் பங்களிப்புகள் முக்கிய பங்கு வகித்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.

Tags : Deeraj Seth ,India ,Delhi ,Lieutenant General ,31st Commander-in-Chief ,the Army of ,General ,Ubentra Diveti ,Forces ,Deeraj ,
× RELATED E20 பெட்ரோல் குறித்து ஒன்றிய அரசு பகீர் விளக்கம்!