×

கர்நாடகத்தில் குட்கா, பான் மசாலாவிற்கு தடை! டிகே சிவக்குமார் எச்சரிக்கை…

கர்நாடகா: கர்நாடகத்தில் பான் மசாலா, குட்கா மற்றும் அதுபோன்ற மெல்லும் புகையிலைப் பொருட்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார் அறிவித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள கந்தீரவா மைதானத்தில் நடைபெற்ற ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் 31-வது ஆண்டு விழாவில் டிகே சிவக்குமார் பங்கேற்று பேசினார். அதில் அவர் கூறியது, பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதில் கணிசமான அளவு போதை வஸ்துக்கள் கலக்கப்படுவதாக புகார் தெரிவிக்கபடுகிறது.

மேற்கண்ட பொருட்களில் சிறிதளவு போதைப்பொருள் கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் கூட , அவற்றின் விற்பனைக்கு கர்நாடகத்தில் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் அரசுக்கு ரூ.100 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை. கர்நாடகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவதே அரசின் நோக்கம் என்று டிகே சிவக்குமார் கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது, போதைப்பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வலுவான மன உறுதி அவசியம் என்றார். ‘நஷா முக்த் பாரத்’ திட்டத்தின் நோக்கம் போதைப்பொருளை ஒழிப்பது மட்டுமல்ல; நாடு முழுவதும் ஆரோக்கியமான குடும்பங்களை உருவாக்குவதும் ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.

கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பேசுகையில், போதைப்பழக்கம் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் நாட்டின் எதிர்காலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்றார். மேலும், உறுப்பு தானம் மனிதநேயத்தின் உயர்ந்த செயல்களில் ஒன்றாகும் என்று ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

Tags : Karnataka ,DK Shivakumar ,Chief Minister ,Rajiv Gandhi University of Health Sciences ,Kanteerava Ground ,Bengaluru… ,
× RELATED மத்திய பிரதேசத்தில் சம்பளம் கேட்ட...