×

வங்கதேசத்தில் தடையை மீறி அவாமி லீக் கட்சியின் நிறுவன நாள் கொண்டாட்டம்

டாக்கா: தற்போதைய வங்கதேசம் கிழக்கு பாகிஸ்தானக இருந்தபோது 1949ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி தொடங்கப்பட்டது அவாமி லீக் கட்சி. 1971ம் ஆண்டு நடந்த நாட்டின் விடுதலைப் போருக்கு இந்த கட்சியானது தலைமை தாங்கியது. கடந்த 2024ம் ஆண்டு மாணவர் போராட்டத்தை தொடர்ந்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

அதற்கு பின் வந்த முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசினால் இந்த கட்சி கலைக்கப்பட்டது. இந்நிலையில் தடையை மீறி அவாமி லீக் கட்சியின் 77வது நிறுவன நாளை கொண்டாடும் வகையில் வங்கதேசத்தின் பல பகுதிகளில் பேரணி நடத்திய அக்கட்சியின் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

Tags : Bangladesh ,Awami League ,Dhaka ,East Pakistan ,
× RELATED ஈரான் போர் செலவுக்காக ரூ.7.5 லட்சம் கோடி கேட்கிறது பென்டகன்