×

பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியலை ஜூலை 1ஆம் தேதி வெளியிடுகிறார் உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன்

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியலை ஜூலை 1ஆம் தேதி உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் வெளியிடுகிறார். ‘ஜூலை 1ஆம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகளும் அறிவிக்கப்படும். தரவரிசைப்பட்டியலில் குறைகள் இருந்தால் ஜூலை 5ஆம் தேதி வரை அதை சரி செய்யலாம்’ எனவும் அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது: CBSE-யின் மறுமதிப்பீட்டு மதிப்பெண்கள் 21.06.2026 அன்று வெளிவந்த நிலையில் 29.06.2026-யில் வெளியிட இருந்த தரவரிசைப் பட்டியல் 01.07.2026 அன்று வெளியிடப்படும். மேலும், பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு (Counselling) தேதிகளும் அன்று அறிவிக்கப்படும்.

வெளியிடப்படும் தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் குறைகள் இருப்பின், அவற்றைச் சரிசெய்வதற்கான குறைதீர்ப்பு (Grievance Redressal) காலம் 01.07.2026 முதல் 05.07.2026 வரை வழங்கப்படும். இந்தக் காலகட்டத்தில் மாணாக்கர்கள் தங்களுக்குரிய குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள, அருகிலுள்ள தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை சேவை மையங்களை (TFCs) நேரில் அனுகலாம் என்று தெரிவித்து கொள்ளப்படுகிறது. இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags : Higher Education ,Minister ,Viswanathan ,Chennai ,Higher Education Minister ,
× RELATED தமிழ்நாட்டின் முதலீடுகளை...