×

நாளை நீட் மறுதேர்வு

 

சென்னை: வினாத்தாள் முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்ட இளநிலை நீட் தேர்வுக்கான மறுதேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் மருத்​து​வம் மற்​றும் பல் மருத்​துவ படிப்பு மாணவர் சேர்க்​கைக்​காக நீட் (யுஜி) நுழைவுத்​தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகை​யில், நடப்பு கல்வி ஆண்டு சேர்க்கைக்​கான நீட் தேர்வு மே 3ம் தேதி நடந்​தது. வினாத்​தாள் கசிந்ததால் அத்​தேர்வு ரத்​து செய்​யப்​படு​வ​தாக​வும் நீட் மறுதேர்வு ஜூன் 21ம் தேதி நடத்தப்​படும் என்றும் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறி​வித்​தது. நீட் வினாத்தாள் கசிவு விவாகரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

சமூக வலைதளம் மூலம் பிரபலமான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் போராட்டம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நீட் மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். அதன்படி, நாளைய தினம் மறுதேர்வு நடக்க இருக்கிறது. மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யுமாறு தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி, வாட்ஸ் அப், மின்னஞ்சல் வாயிலாக நினைவூட்டல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களுக்கான தேர்வு நகரங்களை புதிதாக தேர்வு செய்துள்ள நிலையில், கடந்த 3ம் தேதி நடத்தப்பட்ட தேர்வுக்கான ஹால் டிக்கெட் இனி செல்லாது.

நாளை நடக்கவுள்ள மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் புதிதாக பதிவிறக்கம் செய்ய வேண்டும். மறுதேர்வுக்கான கட்டணத்தை செலுத்த சொல்லியோ, வினாத்தாள் தொடர்பான ‘லிங்கு’களையோ வரும் செய்திகளை நம்ப வேண்டாம். அவை போலி செய்திகள் என என்.டி.ஏ தெரிவித்து இருந்தது. மேலும், நீட் மறுதேர்வு முடியும்வரை ‘டெலிகிராம்’ அக்சஸ், இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடரும் தற்கொலைகள்: நீட் தேர்வு ரத்து செய்யப்படாததால் லட்சக்கணக்கான மாணவர்களின் கனவு சிதைந்ததாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான மன அழுத்தம் காரணமாக தமிழகத்தில் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர். கோயம்புத்தூரைச் சேர்ந்த அனுகீர்த்தனா மற்றும் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த கோபிகா ஆகிய இரண்டு மாணவிகள் இந்த தேர்வு குறித்த அச்சம் மற்றும் மன உளைச்சல் காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags : Chennai ,NEET ,UG ,
× RELATED ராகுலுக்கு தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து