×

ஹார்முஸ் நீரிணை அருகே ஈரானுக்கு எதிரான கடல்வழி முற்றுகையை வாபஸ் பெற்றது அமெரிக்கக் கடற்படை

 

வாஷிங்டன்: ஹார்முஸ் நீரிணை அருகே ஈரானுக்கு எதிரான கடல்வழி முற்றுகையை அமெரிக்கக் கடற்படை வாபஸ் பெற்றது. அதிபர் ட்ரம்பின் உத்தரவை ஏற்று, ஈரானியத் துறைமுகங்களுக்குள் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்துக் கப்பல்கள் மீதான தடையையும் நீக்குவதாக அமெரிக்கக் கடற்படை அறிவித்துள்ளது.

இரானியத் துறைமுகங்களுக்குள் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்துக் கடல்சார் போக்குவரத்துகளுக்குமான கடற்படை முற்றுகை நீக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க மத்திய கட்டளையகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் அனைத்து இராணுவ முற்றுகை அமலாக்க முயற்சிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

வளைகுடா பகுதியில் ஈரானிய துறைமுகங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் கப்பல்களின் போக்குவரத்தை அமெரிக்கப் படைகள் இனி தடுக்காது. ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களும் பின்பற்றப்படுவதையும், மதிக்கப்படுவதையும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதையும் உறுதி செய்வதற்காக எங்களது சிறந்த கடற்படைக் கப்பல்கள் அந்தப் பொதுவான கடல் பிராந்தியத்தில் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டிருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Tags : US Navy ,Iran ,Strait of Hormuz ,Washington ,President ,Trump ,
× RELATED முழு நேரலை.. முழு நேரலை.. அத்தனையும்...