×

மேகதாது விவகாரம் – ஒருமனதாக நிறைவேறிய தனித்தீர்மானம் ; திமுக விடுத்த கோரிக்கையும் ஏற்பு

சென்னை: மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. மேகதாது விவகாரம் தொடர்பான தனித் தீர்மானத்திற்கு பேரவையில் திமுக ஆதரவு மற்றும் வரவேற்பு தெரிவித்தது. மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், நீண்ட மற்றும் நெடிய சட்டப்போராட்டத்தை நடத்தியே காவிரியில் தமிழகத்திற்கான உரிமையை பெற்றுள்ளோம்.

காவிரி விவகாரத்தில் நமது உரிமை நிலைநாட்டப்பட்டது திமுக அரசினாலேயே என்பதை இங்குள்ள மூத்த உறுப்பினர்கள் அறிவார்கள். மேகதாது அணை கட்டும் முயற்சியை அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மிக கடுமையாக எதிர்த்தார்.

எங்கள் கூட்டணி கட்சி கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்த போதும் கூட, அதனை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தான் நாங்கள் மேகதாது அணை கட்டுவதை எதிர்த்தோம். அதே போல மேகதாது அணை திட்டத்திற்காக ரூ.1000 கோடி கர்நாடக அரசு ஒதுக்கியதைக் கண்டித்து, இதே அவையில் தீர்மானம் நிறைவேற்றியது திமுக அரசு. அரசின் தனித் தீர்மானத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்படவில்லை. அடுத்த காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு உறுதியாகப் பேசி, நமக்கான நீர் பங்கீட்டை பெற வேண்டும். மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அனைத்துக் கட்சி குழுவினரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த தனித் தீர்மானத்தை பிரதமரிடம் சென்று வழங்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்து உள்ளார். இந்த கோரிக்கைக்கு பதில் தெரிவித்த முதல்வர், எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கை ஏற்கப்பட்டு தீர்மானத்தில் திருத்தும் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

 

Tags : Dhimuka ,Chennai ,Vijay ,Megadath Dam ,Tamil Nadu Assembly ,Timuka ,Megadhat ,Megadhat Dam ,
× RELATED மேகதாது விவகாரத்தில் நிரந்தர தீர்வு...