×

‘தொல்குடி தொடுவானம்’ திட்டத்தில் 16 பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறை மற்றும் கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு சாலைப் போக்குவரத்து நிறுவனம் இணைந்து ‘தொல்குடி தொடுவானம்’ திட்டத்தின் கீழ் 16 பழங்குடியின இளைஞர்களுக்கு”கனரக மோட்டார் வாகன” ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமத்துடன் பொது வில்லை வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறையில் வேலைவாய்ப்புகளை பழங்குடியின இளைஞர்கள் பெறும் வகையில், இந்த தொழிற்பயிற்சி வடிவமைக்கப்பட்டது. 67 நாள் பயிற்சியில், கனரக வாகனங்களை இயக்குதல், சாலைப் பாதுகாப்பு விதிகள், வாகன பராமரிப்பு, பயணிகளை அணுகும் முறைகள் மற்றும் தொழில்முறை ஓட்டுநர் பயிற்சிகள் குறித்து விரிவான மற்றும் நடைமுறை விளக்கங்களுடன் கூடிய பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்த பயிற்சியின் வெற்றியாக, 16 பழங்குடியின இளைஞர்களும் பயிற்சி முடித்தவுடனேயே 100 விழுக்காடு (100%) நேரடி வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மின்சாரப் பேருந்து பிரிவிலும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்ட போக்குவரத்து பணிமனைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Tags : Tamil Nadu government ,Chennai ,Tamil Nadu Government's Tribal Welfare Department ,Government Road Transport Corporation ,Gummidipoondi ,
× RELATED நான் முதல்வன் திட்டத்தின் பெயரை...