×

மேகதாது அணை கர்நாடகத்தைவிட தமிழகத்திற்கு தான் அதிகம் உதவும் – கர்நாடக முதல்வர் பேச்சு

பெங்களூரு: மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு அதிகளவில் பலன் கிடைக்கும் என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியுள்ளார். மேகதாது திட்டம் என் இதயத்துக்கு மிக நெருக்கமானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கும் முக்கியமானது என்று டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவை விட மேகதாது அணை திட்டம் தமிழகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி தண்ணீரை திறக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். ஏனெனில், உச்சநீதிமன்றம் கூறியுள்ள 177.25 டிஎம்சி தண்ணீரை திறக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். மேகதாது அணை திட்டத்திலிருந்து ஒரு டிஎம்சி தண்ணீரைக்கூட பாசனத்துக்கு பயன்படுத்த முடியாது. அதன் முதன்மையான நோக்கம் குடிநீர் வழங்குவது. ஒரு வாளி தண்ணீரைக்கூட பாசனத்துக்குப் பயன்படுத்த முடியாது.

குறிப்பாக, பெங்களூரின் மக்கள்தொகை வேகமாக வளர்ந்து வருகிறது. கிருஷ்ணா நதியிலிருந்து நாம் தண்ணீர் கொண்டுவர முடியாது. காவிரி மட்டுமே நமது ஒரே ஆதாரம். இந்த நீர்த்தேக்கத்தால், நாம் தண்ணீரை மிகவும் திறம்படச் சேமித்து நிர்வகிக்க முடியும். தமிழ்நாட்டில் மேகதாது அணை விவகாரத்தை ஓர் அரசியல் நிகழ்ச்சி நிரலாகவே கொண்டுள்ளனர்.

கடந்த 40 முதல் 50 ஆண்டுகளாக அவர்கள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த அரசியலில் நான் தலையிட விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே நீதிமன்றம் ஒரு வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. இது கர்நாடகத்தைவிட தமிழ்நாட்டுக்கு அதிகளவில் உதவும் திட்டமாகும் என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பேசியுள்ளார்.

Tags : Megadadu Dam ,Tamil Nadu ,Karnataka ,Bengaluru ,Chief Minister ,T. K. Shivakumar ,T. ,Megathu ,South ,India ,K. Shivakumar ,
× RELATED ஒன்றிய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு...