×

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட கொடூரம்

 

திருவள்ளூர்; கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சிப்காட் பகுதியில் நேற்று மாலை 3 வயது குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பொதுமக்கள் உதவியுடன் அந்த பகுதியில் தேடி உள்ளனர்.

அப்போது முட்புதரில் காயங்களுடன் குழந்தையை பார்த்த மக்கள் குழந்தையை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். குழந்தைக்கு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனிடையே குழந்தை பாலியல் வன்கொடுமை தொடர்பாக பீகாரைச் சேர்ந்த மஞ்சி (19) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை புலம்பெயர் தொழிலாளர்கள் 4 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், அவர்களைக் கைது செய்ய வேண்டும் எனவும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags : Kummidipundi ,Mudputar ,Thiruvallur ,Khummidipundi Chipkat ,Thiruvallur district ,Bihar ,
× RELATED ஓமன் கடல் பகுதியில் இயந்திரக் கோளாறு...