- கொல்கத்தா
- அபிஷேக்
- திரிணாமூல் காங்கிரஸ்
- பொதுச்செயலர்
- அபிஷேக் பானர்ஜி
- திரிணாமுல் காங்கிரஸ்
- மேற்கு சட்டமன்றத் தேர
- திரிணாமுல்
கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி வீட்டில் போலீசார் இன்று அதிகாலையில் அதிரடி சோதனை நடத்தினர். மேற்குவங்க சட்டசபை தேர்தலில் வெற்றிப் பெற்ற சில திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கையெழுத்து மோசடி செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரான அபிஷேக் பானர்ஜி, கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக மாநில குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணைக்கு நேரில் ஆஜரானார். பல்வேறு விசாரணை முகமைகள் அவருக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பி வந்த நிலையில், இந்த விசாரணை ஏற்கனவே நடந்து முடிந்தது.
ஆசிரியர் நியமன ஊழல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பாக அவர் மீது ஏற்கனவே பலகட்ட விசாரணைகள் நடந்துள்ள நிலையில், இந்த தொடர் சட்ட நடவடிக்கைகளால் மேற்குவங்க அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வந்தது. இந்நிலையில், மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் சல்போனி போலீஸ் நிலையத்தில் பதியப்பட்ட புதிய வழக்கு தொடர்பாக, கொல்கத்தா காளிகாட்டில் உள்ள அபிஷேக் பானர்ஜி வீட்டுக்கு இன்று அதிகாலை 3 மணி அளவில் போலீசார் வந்தனர். ஒன்றிய அரசின் பாதுகாப்பு படையினருடன் வந்த போலீசார், சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வீட்டின் பூட்டை உடைத்து போலீசார் உள்ளே நுழைந்ததாக திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி உடனடியாக அங்கு விரைந்து வந்தார். சோதனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அபிஷேக் பானர்ஜி, ‘போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, ஒவ்வொரு அறையிலும் அத்துமீறி சோதனை நடத்தினார்கள்’ என்று கூறினார்.
