×

மீனாட்சி நடராஜன் வேட்பு மனு நிராகரிப்பு: உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர காங்கிரஸ் முடிவு

 

போபால்: மத்​திய பிரதேச மாநிலத்​தில் காலி​யாக உள்ள 3 மாநிலங்​களவை இடங்​களுக்கு தேர்​தல் அறிவிக்​கப்​பட்​டது. இதில், ஆளும் பாஜ 2 இடத்​தி​லும் காங்​கிரஸ் ஒரு இடத்திலும் எளி​தாக வெல்ல முடி​யும் என்ற நிலை இருந்தது. ஆனால் பாஜ பொதுச் செய​லா​ளர் தருண் சக், மாநில செயலாளர் ரஜ்னீஷ் அகர்​வால் ஆகியோர் வேட்​பாளர்​களாக அறிவிக்​கப்​பட்டிருந்​தனர். பாஜ​விடம் 48 வாக்​கு​கள் உபரி​யாக இருப்​ப​தால் 3வது வேட்​பாள​ராக மகேஷ் கெவத் அறிவிக்கப்பட்டார். காங்​கிரஸ் சார்​பில் தமிழகத்தை பூர்​வீக​மாகக் கொண்ட மீனாட்சி நடராஜன் வேட்பு மனு தாக்​கல் செய்​திருந்​தார். ஆனால், ஐதராபாத் நீதிமன்றத்தில், நிலு​வை​யில் உள்ள குற்ற வழக்கு பற்றி வேட்​பு மனு​வில் குறிப்​பிடப்​ப​டாத​தால் மீனாட்சி நடராஜனின் வேட்பு மனு நிராகரிக்​கப்​படு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டது. இதனால் காங்கிரசார் அதிர்ச்சியடைந்தனர்.

இந்​நிலை​யில், தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் மற்​றும் தேர்​தல் ஆணை​யர்​களை காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வர்​கள் நேற்று சந்​தித்​தனர். அப்​போது, “மீ​னாட்சி நடராஜன் மீது நீதி​மன்​றம் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​காத நிலையில் அவரது மனு நிராகரிக்​கப்​பட்​டுள்​ளது. அவரது மனுவை ஏற்​கு​மாறு தேர்​தல் அதி​காரிக்கு உத்​தர​விட வேண்​டும்​“ என கோரிக்​கை மனு அளித்​தனர்​. இந்த நிராகரிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. மேலும், “இது ஜனநாயக படுகொலை மற்றும் திட்டமிடப்பட்ட சதி” என்றும், தங்களது 62 எம்.எல்.ஏக்களுடன் டெல்லி சென்று ஜனாதிபதி திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து முறையிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

மேலும் இது சம்பந்தமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று கட்சியின் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கிடையில், மீனாட்சி நடராஜனின் மனு நிராகரிக்கப்பட்டதால், 3ம் இடத்திற்கு போட்டியிட்ட பாஜ வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் காங்கிரஸ், தனது எதிர்ப்பை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தீவிரப்படுத்தியுள்ளது.

Tags : Meenakshi Natarajan ,Congress ,Supreme Court ,Bhopal ,Madhya Pradesh ,Bahia ,BAJA GENERAL SECRETARY ,
× RELATED அதிக எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு...