×

லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் – ராமதாஸ்

சென்னை: லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார் . டீசல் மீதான வரியை குறைப்பதற்கும் சுங்கச்சாவடி கட்டண உயர்வுகளை மறுபரிசீலனை செய்யவும் நடவடிக்கை தேவை என்று குறிப்பிட்டுள்ளார். டீசல் விலை, சுங்க கட்டணம் உயர்வு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பால் லாரி உரிமையாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். அதேபோல், போக்குவரத்து கழகங்களில் நீண்ட காலமாக ஒப்பந்த முறையில் பணியாற்றுவோரை நிரந்தாமாக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags : Ramadoss ,Chennai ,
× RELATED தென்காசியில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்