×

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒருபேச்சு.! நீங்க ஆட்சிக்கு வந்ததும் தான் இது கண்ணுக்கு தெரியுதா?

தூத்துக்குடி: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் திமுக ஆட்சியில் செய்ய பல நல்ல விஷயங்களை எல்லாம், தங்கள் ஆட்சியில் செய்து வரும் விஷயங்களை போல காட்டி மக்களை தவெக-வினர் ஏமாற்றி வருகின்றனர் என்று குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும் சோஷியல் மீடியாக்களில் தவெக-வினர் தொடர்ந்து பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தவெகவினரின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் தவெக-வினரின் அட்ராசிட்டி ரொம்ப அதிகமாக இருக்கிறது. ஸ்ரீவைகுண்டம் பெண் கதறி அழுவது விஜய்க்கு கேட்கவில்லையா என்று கீதா ஜீவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தலுக்கு முன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மாநிலத்தை ஆளும் அரசு தான் பொறுபேற்க வேண்டும் என்று முழங்கிய விஜய், தான் ஆட்சி பொறுப்பிற்கு வந்தபின் சிங்கப்பெண் சிறப்பு திட்டத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய வேண்டும் என்றால் தனிமனித ஒழுக்கம் இருக்க வேண்டும் என்று பேசுகிறார். தனி மனித ஒழுக்கம் என்பதுதான் சமூக ஒழுக்கம் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், அதனைச் சொல்லி தனது பொறுப்பிலிருந்து கை நழுவ நினைக்கிறாரா முதலமைச்சர் விஜய் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றும் கீதா ஜீவன் கூறி உள்ளார்.

ஆனால் தொடர்ச்சியாக பாலியல் புகார்களில் சிக்கி வரும் தவெக-வினர் மீது இதுவரை முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கீதா ஜீவன் சுட்டிக்காட்டினார். த.வெ.க.வினர் தொடர்புடைய சென்னை சிறுமி வன்கொடுமை, திருவைகுண்டம் பெண் வன்கொடுமை ஆகியவற்றிற்கு எதிராக ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? குற்றத்தை மறைக்க பார்க்கிறீர்களா என்று கடும் கண்டனத்தையும் ஆளும் அரசுக்கு எதிராக கீதா ஜீவன் பதிவு செய்துள்ளார்.

Tags : Thoothukudi ,Former minister ,Geetha Jeevan ,Dimuka ,
× RELATED நீட் தேர்வை தமிழ்நாடு அரசு...