சென்னை: தமிழக சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி-யாக பொறுப்பேற்றுள்ள மகேஷ் குமார் அகர்வால், மாநிலத்தில் குற்றங்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் காவல்துறையினருக்கு தீவிர நடை ரோந்து பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல் நடை ரோந்து பணி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே காவல்நிலைய அதிகாரி உட்பட SP, DCP என அனைவருமே ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அறிவுறுத்தி உள்ளார்.
உள்ளூர் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்த காவல் நடை ரோந்து உதவியதாக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் குறிப்பிட்டு உள்ளார். மக்களின் நம்பிக்கையை மேம்படுத்தவும், சமூகத்துடனான காவல்துறையின் தொடர்பை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பது உள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.
காவல் நடை ரோந்து பணிகளுக்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் கிடைத்து உள்ளது. மேலும் இந்த ரோந்து பணி மூலம் சட்டம், ஒழுங்கு தொடர்பான சிக்கல்களை துவக்கத்திலேயே எளிதாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று டிஜிபி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான, அமைதியான சூழல் உருவாக்கப்படும் என்று டிஜிபி தெரிவித்துள்ளார்.
