×

கோவைக்கு மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது அறிவிப்பு

கோவை: கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. மத்திய அரசு 2025ஆம் ஆண்டிற்கான புகழ்பெற்ற தேசிய பஞ்சாயத்து விருதுகளை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த உயரிய விருது பட்டியலில் கோவை மாவட்டம் 3-வது பரிசை பெற்று ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமையை சேர்த்துள்ளது.

மேலும் இந்த தேசிய விருதுகளுக்கான போட்டியில் திரிபுராவின் சிபாஹிஜாலாவு மாவட்டத்திற்கு முதல் பரிசு மற்றும் ஒடிசா கஞ்சம் மாவட்டத்திற்கு 2வது பரிசு கிடைத்துள்ளது. மேலும் சிறந்த ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சி போன்ற பல்வேறு பிரிவுகளுக்கான விருதுகளும் சேர்த்து அறிவிக்கப்பட்டுள்ளன.

உள்ளாட்சி நிர்வாகத்தில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, தேசிய அளவில் முத்திரை பதித்துள்ள கோவை மாவட்டத்திற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

Tags : Coimbatore district ,Coimbatore ,panchayat ,government ,Tamil Nadu… ,
× RELATED 2016 தேர்தலில் இன்பதுரை வெற்றி பெற்றது...