சண்டிகர்: ஐபிஎல் குவாலிபயர் 2 போட்டி: குஜராத் அணிக்கு 215 ரன்களை ராஜஸ்தான் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. சண்டிகரில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது. தொடர்ந்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்க உள்ளது.
