×

தரக்கட்டுப்பாட்டில் குறைபாடு; இந்திய மாம்பழங்களுக்கு ஜப்பானில் திடீர் தடை: உத்தரபிரதேசத்தில் நடந்த ஆய்வில் அம்பலம்

 

டோக்கியோ: இந்திய மாம்பழங்களில் பூச்சிக் கட்டுப்பாட்டு நடைமுறைகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, ஜப்பான் அரசு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் மாம்பழ இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாம்பழங்களின் பூச்சிக் கட்டுப்பாட்டு நடைமுறைகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்திய மாம்பழங்களுக்கு ஜப்பான் அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது.

நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் ரஹ்மான்பூரில் உள்ள நீராவி வெப்பச் சிகிச்சை மையத்தில் ஜப்பான் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், கிருமி நீக்கம் செய்யும் முறையில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கடந்த மார்ச் 25ம் தேதிக்குப் பிறகு வழங்கப்பட்ட ஆய்வுச் சான்றிதழ்களைக் கொண்ட இந்திய மாம்பழ ஏற்றுமதிப் பொருட்களை ஏற்பதில்லை என ஜப்பான் யோகோஹாமா தாவரப் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

இந்தத் தடையால் அல்போன்சா, கேசர், லங்ரா, பங்கனப்பள்ளி போன்ற இந்தியாவின் உயர்தர ரக மாம்பழங்களின் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே எல் நினோ காலநிலை மாற்றத்தால் 85 முதல் 90 சதவீதம் வரை பயிர் இழப்பைச் சந்தித்துள்ள மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மா விவசாயிகளுக்குப் பெரும் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Tags : Japan ,Uttar Pradesh ,Tokyo ,Japanese government ,India ,
× RELATED பாஜகவை வீழ்த்த புதிய வியூகம்; ஜூன் 6ல்...