×

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்தார்

 

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகையில் உள்ள செயலாளரிடம் சமர்ப்பித்தார். ஆளுநர் இல்லாத காரணத்தால் செயலாளரிடம் சமர்ப்பித்தார். கர்நாடகாவின் புதிய முதல்வராகிறார் டி.கே.சிவக்குமார். கர்நாடகாவில் நீண்ட இழுபறிக்கு பிறகு பதவியை ராஜினாமா செய்தார். சித்தராமையா. இதைத் தொடர்ந்து அம்மாநில முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்க உள்ளார்.

கர்​நாட​கா​வில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த சட்​டமன்ற தேர்​தலில் காங்​கிரஸ் கட்சி அமோகமாக வெற்றி பெற்றது. ஆனால், முதல்​வர் பதவி யாருக்கு என்பதில் கடும் போட்டி ஏற்​பட்​டது. மூத்த தலை​வர்​களான‌ சித்​த​ராமை​யா, டி.கே.சிவகுமார், ஜி.பரமேஷ்வர் ஆகிய மூவருக்​கும் இடையேதான் இந்த போட்டி நில​வியது. நீண்ட இழுபறிக்கு பின்​னர் சித்​த​ராமை​யா​வுக்கு முதல்​வர் பதவியும், டி.கே.சிவகு​மாருக்கு துணை முதல்​வர் பதவி​யும் வழங்கப்​பட்​டது. அப்​போது இரு​வருக்​கும் தலா இரண்​டரை ஆண்டு​கள் முதல்​வர் பதவி வழங்க காங்​கிரஸ் மேலிட தலைவர்கள் சம்​மதம் தெரி​வித்​த​தாக கூறப்​படு​கிறது.

இந்நிலையில் சித்​த​ராமையா முதல்​வ​ராக பொறுப்​பேற்று 3 ஆண்​டு​கள் ஆன நிலை​யில், டி.கே.சிவகு​மாருக்கு முதல்​வர் பதவியை வழங்க வேண்​டும் என அவரது ஆதர​வாளர்​கள் போர்க்​கொடி தூக்​கினர். இதையடுத்து டெல்​லி​யில் நேற்று முன்​தினம் மாலை காங்​கிரஸ் தேசி​ய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே தலை​மை​யில் முதல்வர் மாற்ற விவ​காரம் தொடர்​பான ஆலோ​சனை கூட்​டம் நடந்தது. இதில் மக்​களவை எதிர்க்​கட்சி தலைவர் ராகுல் காந்​தி, சித்​த​ராமை​யா, டி.கே.சிவகு​மார் உள்​ளிட்​டோர் பங்கேற்றனர்.

சுமார் 6 மணி நேரம் நடந்த இந்த கூட்​டத்​தில், கர்​நாட​கா​வில் முதல்​வரை மாற்​று​வது குறித்து விரி​வாக விவா​திக்​கப்​பட்​டது. அப்போது, சித்​த​ராமை​யாவை முதல்​வர் பதவி​யில் இருந்து வில​கு​மாறு மேலிட தலை​வர்​கள் கூறினர். மேலும் மாநிலங்​கள​வை தேர்​தலில் போட்​டி​யிட்​டு, தேசிய அரசி​யலில் கவனம் செலுத்துமாறும் வலி​யுறுத்​தினர். இதையடுத்து அவர் முதல்​வர் பதவியை விட்​டு ​கொடுக்க சம்மதித்​த​தாக கூறப்​படு​கிறது. இந்நிலையில் டெல்லியில் இருந்து முதல்​வர் சித்​த​ராமை​யா, இன்று பெங்களூரு திரும்பினார். பின்னர் அமைச்​சரவை கூட்​டத்​தை இன்று காலை தனது அதிகாரபூர்வ இல்லமான காவேரியில் கூட்டினார்.

இதில் மாநிலத்தின் முக்கிய அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர். இது அதிகாரப் பகிர்வு சுமுகமாக நடப்பதை குறிப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்த காலை சிற்றுண்டி கூட்டத்தின்போது, முதல்வர் பதவியிலிருந்து விலக போவதாக, சக அமைச்சர்களிடம் அதிகாரப்பூர்வமாக சித்தராமையா தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தின்போது, அடுத்த முதல்வராக பொறுப்பேற்கவுள்ள தற்போதைய துணை முதல்வர் டி.கே.சிவகுமார், முதல்வர் சித்தராமையாவை கட்டியணைத்து பின், கால்களை தொட்டு வணங்கியுள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. சித்தராமையாவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த சந்திப்பு அமைந்ததாக உள் துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து, மதிய உணவுக்கு பிறகு முதல்வர் சித்தராமையா, ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி சமர்ப்பிக்க அனுமதி கோரியிருந்தார். இதையொட்டி, பெங்களூருவில் உள்ள டி.கே.சிவகுமாரின் இல்லம் மற்றும் முதல்வரின் இல்லத்திற்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

சித்தராமையா ராஜினாமா செய்யும் பட்சத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பெங்களூருவில் நடைபெறும். இதில் டி.கே.சிவகுமார் முறைப்படி சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அதைத் தொடர்ந்து அவர், ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார். டெல்லி மேலிட தகவல்களின்படி, டி.கே.சிவகுமார் கர்நாடகாவின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் எனது ராஜினாமாவை ஆளுநர் ஏற்க வேண்டும். கட்சி தலைமை உத்தரவை ஏற்று ராஜினாமா செய்தார். தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என ஏற்கெனவே கூறியுள்ளேன்.

 

 

 

 

Tags : Karnataka ,Chief Minister ,Siddaramaiah ,Bangalore ,T. K. Shivakumar ,
× RELATED அமைதி பேச்சுவார்த்தை நடந்து வரும்...