×

கேரள மாநில பெண் காட்பாடியில் தவறவிட்ட 3 சவரன் நகை, பணம் மீட்டு ஒப்படைப்பு

 

வேலூர், மே 27: கேரள மாநிலம் பெண் காட்பாடியில் தவறவிட்ட 3 சவரன் நகை, பணத்தை மீட்டு நேற்று உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர். கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர் சோனியா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டையில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் நேற்று காலை மீண்டும் இடுக்கி செல்வதற்காக ராணிப்பேட்டையில் இருந்து காட்பாடிக்கு பஸ்சில் வந்தார். பின்னர் பஸ் மூலம் திருச்சி செல்வதற்காக அங்கிருந்து ஆட்டோ மூலம் வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார்.

அங்கு தனது உடமைகளை சரிபார்த்தபோது 3 சவரன் நகை, ரூ.2000 பணம், ஒரு செல்போன் வைத்திருந்த கைப்பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம்பக்கம் என பல்வேறு இடங்களில் தேடினார். இதற்கிடையே ஒரு நபர், விருதம்பட்டு காவல்நிலையத்திற்கு சென்று கைப்பை ஒன்று வழியில் கிடந்தது எனக்கூறி போலீசாரிடம் ஒப்படைத்தார். அதில் 3 சவரன் நகை, ரூ.2000 பணம், ஒரு செல்போன் இருந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சோனியா விருதம்பட்டு காவல்நிலையத்திற்கு ெசன்று தனது கைப்பை காணாமல் போனது குறித்து புகார் தெரிவித்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில், வழியில் கிடந்ததாக ஒப்படைக்கப்பட்ட கைப்பை சோனியாவுடையது என தெரியவந்தது. இதையடுத்து ஏடிஎஸ்பி பழனி தலைமையில் டிஎஸ்பி விஜயகுமார், இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் அந்த கைப்பையை சோனியாவிடம் ஒப்படைத்தனர்.

 

Tags : Kerala ,Vellore ,Sonia ,Idukki, Kerala ,Ranipet ,
× RELATED வேலூர் காகிதப்பட்டறையில் தொடரும்...