×

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ரூ.45 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் திருட்டு

சேத்தியாத்தோப்பு, மே 25: கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வடக்குமெயின் ரோட்டில் வசித்து வருபவர் சுந்தர்ராஜன்(73). தொழிலதிபரான இவர் சுமார் ரூ.45 லட்சம் மதிப்புள்ள தனது சொகுசு காரை நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்க சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை 5 மணி அளவில் எழுந்து வந்து பார்த்தபோது, வீட்டின் முன் நிறுத்தி இருந்த சொகுசு கார் காணாமல் போயிருந்தது.

காரை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து இவரது மகன் முரசொலி மாறன் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பரபரப்பான போக்குவரத்து சாலை அருகே சுமார் 20 மீட்டர் தூரத்திற்குள் இருந்த இவரது வீட்டின் முன் நிறுத்தியிருந்த சொகுசு கார் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : Sethiyathopu ,Sundarrajan ,North Main Road ,Cuddalore district ,
× RELATED மரக்காணம் அருகே வடை வாங்கி கொடுத்து 11 வயது சிறுமிக்கு பாலியல் அத்துமீறல்