×

தவெக அமைச்சரவையில் பங்கேற்கும் விசிக மற்றும் ஐயூஎம்எல்: வன்னி அரசு, ஷாஜகான் இன்று பதவியேற்பு…!

சென்னை: தவெகவின் அழைப்பை ஏற்று அமைச்சரவையில் இடம் பெறுவதாக விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. தமிழ்நாடு அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தவெகவை சேர்ந்த 21 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதனை தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது.

இதற்கிடையில் தவெகவின் அழைப்பை ஏற்று அமைச்சரவையில் இடம் பெறுவதாக விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் நேற்று அறிவித்தன. இது தொடர்பாக நேற்று செய்தியளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், தவெக அமைச்சரவையில் விசிக இடம் பெறும் என்றும் அமைச்சராக வன்னி அரசு பொறுப்பேர்ப்பார் என்றும் கூறினார்.

அதே போல ஐயூஎம்எல் கட்சியின் தலைவர் காதர் மொகிதீன், தவெக அமைச்சரவையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் இடம்பெறும் என்றும் பாபநாசம் தொகுதியின் ஐயூஎம்எல் எம்எல்ஏ ஷாஜகான் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்” என்று அறிவித்தார்.

இதனை தொடர்ந்து ஒப்புதல் கடிதத்தை இரு கட்சியினரும் தவெகவிடம் அளித்தாக தெரிகிறது. இதனையடுத்து இன்று ஆளுநர் மாளிகையில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் வன்னியரசு மற்றும் ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

Tags : VISIKA ,IUML ,DAVEKA CABINET ,VANNI GOVERNMENT ,SHAJAGHAN ,CHENNAI ,VISICA ,TAVEGA ,Tamil Nadu Cabinet ,Governor's ,House ,Davegawa ,Congress ,
× RELATED தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: 23 பேர்...