டெல்லி: புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹம்சா புர்ஹான் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஹம்சா புர்ஹான் மீது மர்ம நபர்கள் பலமுறை துப்பாக்கியல் சுட்டுள்ளனர். உபா சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட அல் பத்ர் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவராவார் ஹம்சா புர்ஹான். 2019ல் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட புர்ஹானை ஒன்றிய அரசு பயங்கரவாதியாக அறிவித்தது
2023 முதல், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் 50-க்கும் மேற்பட்ட முக்கிய தளபதிகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஹம்சா இந்திய எதிர்ப்பு பயங்கரவாத நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாகவும், தெற்கு காஷ்மீரில் இளைஞர்களைத் தீவிரமயப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்ததாகவும் பாதுகாப்பு அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.
