×

தமிழ்நாட்டில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை: அமைச்சர் நிர்மல்குமார்!

 

சென்னை: தமிழ்நாட்டில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி அளித்துள்ளார். சென்னை உள்பட பல இடங்களில் அறிவிக்கப்படாத மின் வெட்டு குறித்த கேள்விக்கு அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின்சார விநியோகத்தை சீராக செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 160க்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு காரணங்களால் தோண்டப்பட்ட குழிகள் காரணமாக வயர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.

சீராக மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க கூறப்பட்டுள்ளது. மின்துறையில் சீரமைக்க வேண்டிய பணிகள் நிறைய உள்ளது. மின்வாரியத்தில் தவறுகள் கண்டறியப்பட்டால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மின்தடை குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மின் வாரியத்தில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது. 1.40 லட்சம் பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 70 ஆயிரம் பேர் மட்டுமே பணியில் உள்ளனர். டிஎன்பிஎஸ்சி பணி நியமனத்தில் எந்த வித முறைகேடும் நடக்காது. மின்தடை குறித்து புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

Tags : Tamil Nadu ,Minister Nirmal Kumar ,Chennai ,Minister ,Nirmal Kumar ,
× RELATED மேற்கு ஆசியாவில் போர் பதற்றத்தை...