×

20 மாநிலங்களில் ரூ.53 கோடி சைபர் மோசடியில் ஈடுபட்ட 10 பேர் கைது

காந்திநகர்: இணைய வழி மோசடிக்கு எதிரான ஆபரேஷன் மியூல் 2.0 நடவடிக்கையின் ஒரு பகுதியாக குஜராத் மாநில சைபர் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், முன்னாள் மகாராஷ்டிரா அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கில் தொடர்புடைய சல்மான் வோரா என்பவருக்கு ஆனந்த் நகரை சேர்ந்த சாஹில்மியா ஷபீர்மியா மாலேக் தன்னுடைய கர்நாடக வங்கி கணக்கு எண்ணை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

சாஹில் மியாவை கைது செய்து விசாரணை நடத்திய போது இணைய வழி மூலம் 20 மாநிலங்களை சேர்ந்தவர்களிடம் ரூ.53.55 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சம்மந்தப்பட்ட நபர்கள் கமிஷன் தொகையை பெற்று கொண்டு இணைய வழி மோசடிகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதில் சம்மந்தப்பட்ட மேலும் 9 பேரை கைது செய்தனர்.

Tags : Gandhinagar ,Operation ,2.0 ,Gujarat State Cyber Cell Police ,Salman Vora ,Maharashtra ,Minister ,Baba Siddique ,
× RELATED பஞ்சாபில் அடுத்தடுத்து நிகழ்ந்த...