×

மே.வங்கம், அசாமில் மக்கள் ஆணையை திருடிய பாஜ: ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜ பெற்ற வெற்றியானது மக்கள் ஆணையை திருடிய செயலாகும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றிய பாஜ, அசாமில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில்,‘‘காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலரும், மற்றவர்களும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை கண்டு அகமகிழ்கின்றனர்.

அவர்கள் இதனை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். அசாம் மற்றும் மேற்கு வங்க மக்களின் தேர்தல் ஆணையை திருடியது என்பது இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் தனது நோக்கத்தை நோக்கி பாஜ எடுத்து வைத்துள்ள ஒரு பெரிய அடியாகும். சிறுமைத்தனமான அரசியலை ஒதுக்கி வையுங்கள். இது ஒரு கட்சியைப்பற்றியதோ அல்லது மற்றொரு கட்சியைப் பற்றியதோ இல்லை. இது இந்தியாவை பற்றியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : BJP ,West Bengal ,Assam ,Rahul Gandhi ,New Delhi ,Lok Sabha ,Trinamool Congress party ,
× RELATED பஞ்சாபில் அடுத்தடுத்து நிகழ்ந்த...